வொர்க் அவுட் பண்ணா ஆக்சிஜன் லெவல் உயருமா? விளக்கும் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,May 19 2021]
கொரோனாவின் உச்சமாகக் கருதப்படுவது சுவாசக் கோளாறு. இந்தப் பிரச்சனை இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம் தேவைப்படுகிறது. கூடவே நுரையீரல் பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு, ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளையும் மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கூட்டுவதற்கும் சுவாச உறுப்புகளை ஹெல்தியாக வைத்துக் கொள்வதற்கும் மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். மேலும் ஆயுர்வேதா, சித்தா போன்ற பல மருத்துவ முறைகளையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதைத்தவிர கொரோனா நேரத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்துவதற்கு சில வழிமுறைகளை அதுவும் வீட்டிலேயே இருந்து கொண்டு செய்வதற்கு உடற்பயிற்சியாளர் ஆசியா அரவிந்த் அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம், விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆக்சிஜன் அளவை கூட்டுவதற்கும் சீரான முறையில் வைத்துக் கொள்வதற்கும் இவர் கூறும் வழிமுறைகள் பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் கொரோனா நேரத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் இளைஞர்களுக்கு நமது உடற்பயிற்சியாளரின் சில அறிவுரைகள் கைக்கொடுக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.