இந்திரஜா - கார்த்திக் மட்டுமல்ல.. இன்னும் சில பிரபலங்கள்.. Mr and Mrs சின்னத்திரை' போட்டியாளர்கள் முழு லிஸ்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சமீபத்தில் திருமணம் ஆன இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் அவரது கணவர் கார்த்திக் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் முழு பட்டியல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு சில காரணங்களால் ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் இன்று முதல் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த சீசனில் கோபிநாத் மற்றும் நடிகை ராதா நடுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசன்களில் கோபிநாத் உடன் நடிகை தேவதர்ஷினி நடுவராக இருந்த நிலையில் இந்த சீசனில் நடிகை ராதா நடுவராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த சீசனை வழக்கம் போல் மாகாபா மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்க உள்ளனர். இந்த நிலையில் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ஐந்தாவது சீசனில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களின் முழு விவரங்கள் இதோ:
1. இந்திரஜா-கார்த்திக்
2. மீராகிருஷ்ணா-சிவகுமார்
3. நவீன்-சௌமியா
4. ஆஷிக்-சோனு
5. நாஞ்சில் விஜயன்-மரியா
6. சமீர்-அஜீபா
7. வைஷாலி-தேவ்
8. அமித்-ரஞ்சனி
9. லின்சி-சுரேந்தர்
10. தாமரை-பார்த்தசாரதி
11. கொட்டாச்சி-அஞ்சலி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments