குழந்தைகள் தினம் மாற்றப்படுமா? பாஜக எம்பிக்களின் கையெழுத்து வேட்டையால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,April 06 2018]
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடி வரும் நிலையில், பாஜக எம்பிக்கள் 59 பேர் டிசம்பர் 26ஆம் தேதியை குழந்தைகள் தினமாக மாற்ற வேண்டும் என்று கையெழுத்திட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் குழந்தைகள் மேல் அன்பு வைத்திருந்த ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை அங்கிள் தினமாக கொண்டாட வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
டிசம்பர் 26ஆம் தேதி என்பது முகலாயர்களுக்கு எதிராக போராடிய சோட்டா சகித் சதேஷ் பிறந்தநாள் என்றும், அன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும், அவரது பிறந்த நாளில் அவரது தைரியம் மறும் போராடும் நம்பிக்கை போன்றவற்றை பற்றி குழந்தைகளுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.