கடவுள் உள்ளாடையை அளவெடுக்கிறார்… சர்ச்சை கருத்தால் சிக்கிய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் பேசியிருக்கும் கருத்து இணையத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சர்ச்சை கருத்துத் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரசேதத்தைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா திவாரி. 41 வயதான இந்த நடிகை பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். தற்போது “ஷோ ஸ்டாக்கர்“ எனும் வெப் தொடரில் இவர் நடிக்கவுள்ள நிலையில் இதற்கான துவக்கவிழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை ஸ்வேதா திவாரி “கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறார்“ எனக் கிண்டலாக மேடையில் பேசியுள்ளார். இந்தக் கருத்து தற்போது இணையத்தில் கடும் வைரலாகி விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சரான நரோட்டம் மிஸ்ரா, கடவுள் குறித்து பேசியுள்ள ஸ்வேதா திவாரியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது, எந்தச் சூழலிலும் கடவுளை அவமதிக்கும் ரீதியிலான கருத்துகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனச் சாடியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 24 மணிநேரத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று போபால் போலீஸ் கமிஷ்னருக்கு அவர் உத்தரவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடிகை ஸ்வேதா திவாரி மீது போபால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவெளியில் கடவுள் குறித்து நடிகை பேசிய இந்தக் கருத்துக்கு சிலர் கண்டனம் வெளியிட்டுவரும் நிலையில் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் சிலர் நடிகைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தும் வருகின்றனர்.