என்னது 85 கோடி அபராதமா? தனி ஆளாய்ப் போராடும் விமானி!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமான நிலையத்தில் பணியாற்றிய விமானி ஒருவருக்கு அம்மாநில அரசு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது. மேலும் இந்தத் தொகையைச் செலுத்துமாறு அவர்மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மருந்துகளை எடுத்துக்கொண்டு ஒரு சிறியரக விமானம் ஒன்று குவாலியர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. மஜித் அக்தர் எனும் விமானி இயக்கிய இந்த விமானம் தரையிறங்கும்போது திடீரென்று அங்குள்ள கட்டுப்பாட்டுச் சுவரின் மீது இடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது விமானத்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானம் அப்பளம் போல நொறுங்கிவிட்டது. இதையடுத்து விமானம் ஓட்டிய விமானி மீது மத்தியப் பிரதேச அரசு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் மாநில அரசுக்கு சொந்தமான விமானத்தை விமானி மஜித் அக்தர் சேதமாக்கிவிட்டார். இதனால் 60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விமானம் நொறுங்கியதை அடுத்து தனியார் விமானங்களை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது. எனது ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு ரூ.85 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
இதனால் பதறிப்போன விமானி மஜித் அக்தர் நான் 25 வருடங்களாக குவாலியர் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். அப்படியிருந்தும் திடீரென்று விமான நிலையத்தில் தடுப்புச் சுவர் எழுப்பியது குறித்துக் கட்டுப்பாட்டு அதிகாரி எனக்கு எந்த தகவலையும் கூறவில்லை. எனக்குத் தடுப்புச் சுவர் பற்றி எதுவும் தெரியாததால் விபத்து ஏற்பட்டுவிட்டது. இந்த விபத்துக்கு நான் காரணம் அல்ல.
எனவே விமானத்தின் கருப்புப் பெட்டியை சோதித்துப் பாருங்கள். எனக்கு தடுப்புச் சுவர் பற்றி தகவல் சொல்லப்பட்டதா? என்பது தெரிந்துவிடும். அதோடு விமானத்திற்கு காப்பீடு செய்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்காதது யாருடைய குற்றம் என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்று மஜித் தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்துள்ளார். இந்த வழக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com