24 பேரை காவு வாங்கிய விஷசாராய வழக்கின் முக்கியக் குற்றவாளி சென்னையில் கைதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதி விஷச்சாரயம் அருந்தி 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொரேனா மாவட்டத்தை அடுத்த மான்பூர் மற்றும் பகாவலி ஆகிய இரு கிராமங்களிலும் நடைபெற்ற இச்சம்பவத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் 7 பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில் முகேஷ் கிரார் என்பவர் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த 7 குற்றவாளிகளும் தலைமறைவு ஆகியதாகக் கூறப்பட்டது. இதனால் அக்குற்றவாளிகளின் தலைகளுக்குப் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டன. மேலும் இச்சம்பவம் நடைபெற்ற மான்பூர் மாவட்டத்தின் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, பாகினி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அனைத்து காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இத்தனை சர்ச்சைகளை ஏற்படுத்திய விஷசாராய வழக்கின் முக்கியக் குற்றவாளி முகேஷ் கிராரி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மத்தியப் பிரதேச போலீஸார் நேற்று சென்னையில் நடத்திய தேடுதல் வேட்டையில் முகேஷ் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மொரேனா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout