ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,April 18 2018]
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து படங்கள் வரை சராசரியாக ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் காரணமாக நடத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டன. இந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதால் வரும் வெள்ளி முதல் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதங்களாக புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அந்த படங்கள் எவை எவை என்று பார்ப்போமா
சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, விஷாலின் இரும்புத்திரை, நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களும் மேலும் மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி, கரு, டிக் டிக் டிக், நரகாசூரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், அசுரவதம், காளி, பரியேறும் பெருமாள், ஆண் தேவதை, அபியும் அனுவும், களரி, காத்திருப்போர் பட்டியல், கோலி சோடா 2, கீ,
இரவுக்கு ஆயிரம் கண்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், சர்வர் சுந்தரம், குப்பத்து ராஜா, ஆர்.கே.நகர், பார்ட்டி, கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப் படம் 2.0, போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இவற்றில் எந்த படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. மேலும் வாரம் ஒன்றுக்கு மூன்று படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதால் இந்த படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆகி முடிய இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.