ஜிஎஸ்டி வரியில் மாற்றம்: குறையுமா தியேட்டர் கட்டணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு தியேட்டர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. ரூ.120 வரை இருந்த டிக்கெட்டுக்கள் தற்போது ரூ.200 வரை விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றத்திற்கான கூட்டத்தில் திரையரங்கு கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி குறைத்துள்ளார். இதன்படி இனிமேல் ரூ.100க்குள் இருக்கும் டிக்கெட் கட்டணங்களுக்கு 12% ஜிஎஸ்டியும், ரூ.100க்கு மேல் உள்ள டிக்கெட் கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். இதற்கு முன் மொத்தமாக 28% வரி விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அரசு அறிவித்த இந்த வரிச்சலுகையை திரையரங்கு உரிமையாளர்கள் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு வழங்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout