குவிந்து கிடக்கும் தங்கம்… குஷியில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லும் மக்கள்… அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

தங்கத்தின் விலை உச்சியைத் தொட்டு இருக்கும்போது, ஒரு மலை முழுக்க தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்றால் மக்கள் சும்மா விடுவார்களா? அப்படி ஒரு சம்பவம் காங்கோ குடியரசில் நடைபெற்று இருக்கிறது. தங்கம், தாமிரம், கோபால்ட், வைரம் என கனிம வளத்திற்கு பஞ்சமே இல்லாத காங்கோ நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் தங்கம் கடத்தப்படுகிறதாம்.

காரணம் இயற்கையாக கொட்டிக் கிடக்கும் தங்கத்தை மக்கள் தாங்களாகவே வெட்டி எடுக்கும் சம்பவமும் காங்கோவின் கிழக்கு மாகாணங்களில் சாதாரணமாக நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள பிராவா எனும் கிராமத்தை ஒட்டிய ஒரு மலையில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மலையில் கிட்டத்தட்ட 60-90% வரை தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையறிந்த மக்கள் அரசாங்கத்தின் எந்த விதிகளையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக தங்கத்தை வெட்டி எடுக்கத் தொடங்கி விட்டனர். பிராவா கிராமத்தில் நடக்கும் இந்த அதிசயத்தைக் கேள்விபட்ட அக்கம் பக்கத்து கிராமத்தினரும் ஒரே இடத்தில் கூடி தங்கத்தை அள்ளத் தொடங்கி இருக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது.

இப்படி கிடைக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1,690 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். இப்படி பிராவாவில் தங்கம் வெட்டி எடுக்கப்படுவதை அறிந்த காங்கோ குடியரசு தற்போது அந்த மலை ஒட்டிய 50 கிலோ மீட்டர் வரை கடுமையான சட்ட விதிகளை அமல்படுத்தி உள்ளது. மேலும் வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தை மக்களிடம் இருந்து பறிமுதல் செய்யவும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.