மெளனமே பார்வையாய்: வசனமே இல்லாமல் ரசிகர்களை வசியப்படுத்திய நதியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமேசான் ஓடிடியில் ‘புத்தம் புது காலை விடியாதோ’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இதில் 5 குறும்படங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் சந்தேகமே இல்லாமல் முதலிடத்தைப் பிடிப்பது ஜோஜு ஜார்ஜ் மற்றும் நதியா நடித்துள்ள ’மௌனமே பார்வையாய்’ என்ற பகுதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நதியா மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகிய இரண்டு கேரக்டர் தான் கிட்டத்தட்ட படம் முழுவதும் வருகின்றன. தம்பதிகள் இருவருக்கும் ஏற்பட்ட ஊடல் காரணமாக இருவரும் பேசாமல் இருப்பதும், ஒருவருக்கு ஒருவர் செய்தியை பரிமாறிக் கொள்ள கரும்பலகையில் எழுதி வைப்பதும், முக உணர்வுகள் மற்றும் கண்கள் மூலமே கருத்துக்களை பரிமாரி கொள்வதையும் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
ஜோஜுஜார்ஜ் மற்றும் நதியா ஆகிய இரண்டு நடிப்பு ஜாம்பவான்கள் இந்த இரண்டு கேரக்டர்களையும் மிக அசால்ட்டாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நதியாவுக்கு கொரோனா ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் ஜோஜு ஜார்ஜ் துடிப்பதும் அவருக்கு கசாயம், சாப்பாடு, டீ ஆகியவை போட்டு கொடுப்பதும் இருவரும் ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொள்வதும் அருமையான காட்சிகள்.
இருவருக்குமிடையே எதற்காக ஊடல் வந்தது என்ற காட்சியையும் இயக்குனர் மதுமிதா மிகவும் அழகாக உணர்த்தி உள்ளார் என்பதும், ஜோஜு தனது தவறை உணர்ந்து நதியாவிடம் பார்வையாலே மன்னிப்பு கேட்பதும் தனது தவறுக்கு பிராயசித்தம் செய்வதும் அழகு. இந்த திரைப்படத்தில் வசனம் இல்லையே என்ற குறை ஒரு இடத்தில் கூட பார்வையாளர்களுக்கு எழவில்லை என்பது தான் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
கடைசி காட்சியில் இருவரும் ’காபி’ என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே வசனம் பேசும் இந்த ’மௌனமே பார்வையாய்’ படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#PuthamPudhukaalaiVidiyaadha on prime! Watch & share your opinions ?? pic.twitter.com/0SCgT5Yrsm
— Actress Nadiya (@ActressNadiya) January 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments