'மெளனகுரு' சாந்தகுமாரின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருள்நிதி நடித்த ’மௌனகுரு’ மற்றும் ஆர்யா நடித்த ’மகா முனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாந்தகுமாரின் மூன்றாவது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் சாந்தகுமார் இயக்கும் அடுத்த படத்திற்கு ’ரசவாதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ’அநீதி’ படத்தில் நாயகனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார் என்பதும் நாயகியாக தன்யா ஹோப் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ரம்யா சுப்பிரமணியன், ஜிஎம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் தமிழில் இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இயக்குனர் சாந்தகுமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் திரைக்கு இந்த படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த ’அநீதி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Rasavathi #TheAlchemist #santhakumar #arjundas
— Santhakumar (@Santhakumar_Dir) August 5, 2023
Here is the First look of my 3rd movie as a writer & Director and as Producer my First, Rasavathi (The Alchemist) @Santhakumar_Dir @iam_arjundas @actortanya @actorramya @GMSundar_ @MusicThaman @EditorSabu @SPremChandra1… pic.twitter.com/wSvwwdTZN6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com