'தெறி'யுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

  • IndiaGlitz, [Sunday,July 31 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலில் புதிய சாதனை செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் போலீஸ் மற்றும் டிரைவர் வேடத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன் தற்போது 'விஜய் 60' படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
தற்போது 'விஜய் 60' படத்தில் மொட்டை ராஜெந்திரன் டிராபிக் போலீஸ் கேரக்டரில் நடித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'தெறி' விஜய்யுடன் போலீஸ் கேரக்டரில் நடித்த மொட்டை ராஜேந்திரன் இந்த படத்தில் டிராபிக் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் இணையதளங்களில் அவர் டிராபிக் போலீஸ் யூனிபார்பில் இருக்கும் ஸ்டில் வெளியாகியுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

More News

அஜித்துடன் ஆரம்பம், ஜீவாவுடன் முடிவு. காஜல் அகர்வால்

தல அஜித் நடிக்கவுள 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும்...

வெங்கட்பிரபுவுடன் இணைந்த 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக பாசிட்டிவ் விமர்சனம் பெற்றவர் தன்ஷிகா. அதிரடி...

சிம்புவின் 'AAA' படத்தில் மேலும் ஒரு பழம்பெரும் நடிகர்

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின்...

'தல 57' படத்தில் எத்தனை ஹீரோயின்கள்

அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'தல 57' படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி காஜல் அகர்வால்...

'கபாலி'யுடன் கனெக்ஷன் ஆன 'தர்மதுரை'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இரண்டாவது ஹவுஸ்புல் வாரமாக திரையரங்குகளில்...