மொட்ட சிவா கெட்டசிவா பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,March 05 2016]

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது 'பைரவா', மொட்டசிவா கெட்டசிவா மற்றும் 'முனி 3 நாகா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'மொட்டசிவா கெட்டசிவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ராகவா லாரன்ஸ் ஜோடியாக 'டார்லிங்' நாயகி நிக்கி கல்ராணி நடித்துவரும் இந்த படத்தில் சத்யராஜ், சதீஷ், கோவை சரளா, மனோபாலா, கோவை சரளா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகிய பட்டாஸ்' என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை சாய்ரமணி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன்னர் வெளிவந்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்றும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

சூர்யாவின் 24 டீஸரைப் புகழ்ந்து தள்ளிய தமிழ் ஹீரோ

கோலிவுட், பாலிவுட்டில் தனது தனி முத்திரையை பதித்த நடிகர் தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

பாட்ஷாவையும் தெறியையும் ஒரே நேரத்தில் முடித்த ஜி.வி.பிரகாஷ்

இளம் இசையமைப்பாளராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் தெறி'...

பிரபல தொழிலதிபருடன் ஷங்கர் பட நாயகி திருமணம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஊர்மிளா...

நடிகர் சங்க புகாருக்கு ராதிகாவின் ரியாக்ஷன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரூ.1.65 கோடி சங்கத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக புதிய நிர்வாகிகள் நேற்று போலீஸ் புகார் அளித்ததும்...

அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இளையதளபதி

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம்...