close
Choose your channels

வியாழக்கிழமை செண்டிமெண்டில் 'மொட்ட சிவா கெட்ட சிவா'

Wednesday, March 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா 2' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனதோடு ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது. இந்த வெற்றியை அடுத்து தற்போது அவர் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வரும் இந்த படத்தை சாய்ரமணி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் தீவிர ஸ்ரீராகவேந்தர் பக்தர் என்பதால் வியாழக்கிழமை செண்டிமெண்ட் காரணமாக நாளை இந்த சிங்கிள் டிராக் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், சதீஷ், ஸ்ரீமான், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்பட பலர் நடிக்கின்றனர். அம்ரீஷ் கணேஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சர்வேஷ் முரளி ஒளிப்பதிவாளராகவும், ப்ரவீண் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment