'சிவலிங்கா'வை முந்துகிறதா 'மொட்டசிவா கெட்டசிவா'

  • IndiaGlitz, [Sunday,January 29 2017]

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஹாரர் காமெடி படமான 'சிவலிங்கா' படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்த படத்திற்கு முன்பே அவர் நடித்த இன்னொரு படமான 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வேந்தர் மூவீஸ் மதன் தயாரிப்பில் உருவான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் ரிலீசுக்கு பல மாதங்களுக்கு முன்பே தயாராக இருந்தாலும், வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவு பின்னர் கைது காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படம் வேந்தர் மூவீஸ் இடமிருந்து சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக இந்த படம் தற்போது ரிலீஸ் செய்ய எந்தவித பிரச்சனையும் இல்லை

'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீசுக்கு தயாராகிவிட்டதால் 'சிவலிங்கா' தயாரிப்பு நிறுவனத்திடம் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒப்புக்கொண்டதால் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி 'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

More News

சென்னை மெரீனாவில் திடீர் 144 தடை. நடைப்பயிற்சி செல்ல முடியுமா?

சென்னை மெரீனாவில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் நேற்று அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சூப்பர் ஹிட் ஜோடி

சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதி, தமன்னா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் இன்னும் சொல்லப்போனால் பிரபல அரசியல்வாதிகளிடம் இருந்தும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது...

'தல 57' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் தேதி

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழில் இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறியதில் இருந்து எதிர்பார்ப்பின் விகிதம் எகிறியது...

பிரபல நடிகையின் தாத்தா காங்கிரசில் இருந்து திடீர் விலகல்

முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் மகாராஷ்டிரா மாநில கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். மேலும் அவர் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

நான் என்ன தவறு செய்தேன்? கமல்ஹாசனின் வேதனை டுவீட்

மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பம் முதல் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஆதரவு கொடுத்தவர்களில் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த போராட்டத்தில் சினிமாக்காரர்கள் நுழைந்து பெயர் தேட வேண்டாம் என்றும், போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியபோது தைரியமாக அதை தட்டிக்கேட்டதும் கமல்ஹாசன் மட்டுமே...