முழு குடிகாரராக மாறிய மொட்டை ராஜேந்திரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன். அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனை விரைவில் வெளிவரவுள்ள 'தங்கரதம்' திரைப்படம் அடுத்த லெவலுக்கு கொண்டு போய் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.
குடிக்கு அடிமையான அசல் குடிகாரன் போன்ற வேடத்தில் 'தங்கரதம்' படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் கலக்கியுள்ளாராம். மேலும் இந்த படத்தில் அவர் மிஸ்டர் குடிமகன் என்ற பட்டத்துடன் வலம்வருவது மட்டுமின்றி அவருக்கு இந்த படத்தில் ஒரு இண்ட்ரோ பாடலும் உள்ளதாம்.
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இந்த படம் நேரடியாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை வித்தியாசமான இரண்டு வண்டிகளை வைத்து புரமோஷன் செய்து வருகின்றனர். ஒன்று படத்தில் ஹீரோ வெற்றி பயன்படுத்திய 'தங்கரதம்', இன்னொன்று வில்லன் பயன்படுத்த வண்டியாம். இந்த வித்தியாசமான புரமோஷனால் இந்த படம் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.
வெற்றி, அதிதி கிருஷ்ணா, செளந்திரராஜா, மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலமுருகன் இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com