முழு குடிகாரராக மாறிய மொட்டை ராஜேந்திரன்

  • IndiaGlitz, [Monday,June 12 2017]

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன். அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரனை விரைவில் வெளிவரவுள்ள 'தங்கரதம்' திரைப்படம் அடுத்த லெவலுக்கு கொண்டு போய் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

குடிக்கு அடிமையான அசல் குடிகாரன் போன்ற வேடத்தில் 'தங்கரதம்' படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் கலக்கியுள்ளாராம். மேலும் இந்த படத்தில் அவர் மிஸ்டர் குடிமகன் என்ற பட்டத்துடன் வலம்வருவது மட்டுமின்றி அவருக்கு இந்த படத்தில் ஒரு இண்ட்ரோ பாடலும் உள்ளதாம்.

தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இந்த படம் நேரடியாக எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை வித்தியாசமான இரண்டு வண்டிகளை வைத்து புரமோஷன் செய்து வருகின்றனர். ஒன்று படத்தில் ஹீரோ வெற்றி பயன்படுத்திய 'தங்கரதம்', இன்னொன்று வில்லன் பயன்படுத்த வண்டியாம். இந்த வித்தியாசமான புரமோஷனால் இந்த படம் பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

வெற்றி, அதிதி கிருஷ்ணா, செளந்திரராஜா, மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலமுருகன் இயக்கியுள்ளார்.

More News

இன்றைய இசையுலகம் திருப்பதி மொட்டை மாதிரி உள்ளது. இளையராஜா

இசைஞானி இளையராஜா சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் னது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்.

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி தள்ளிவைப்பா?

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

இயக்குனர் சிகரத்திற்கு சிலை எடுக்கும் பிரபல கவிஞர்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் தான் இன்று முன்னணியில் இருக்கும் பல நட்சத்திரங்கள். கமல், ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ், உள்பட பலருக்கு இன்னமும் அவர்தான் மானசீக குரு

அர்த்தம் தெரியாமல் நடித்தார் அனுராக் காஷ்யப்: 'இமைக்கா நொடிகள்' இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் 'இமைக்கா நொடிகள்.

என் பேரன் கல்யாணத்திற்குள்ளாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா? பிரபல அரசியல் தலைவர் கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1996ஆம் ஆண்டில் இருந்து கடந்த இருபது வருடங்களாக அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.