விஜய்க்கு டிரைவர் ஆனாரா 'நான் கடவுள்' ராஜேந்திரன்?

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு டிரைவராக ஒரு காமெடி நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் அட்லி முடிவு செய்தததாக கூறப்படுகிறது. முதலில் இந்த டிரைவர் வேடத்திற்காக வடிவேலு மற்றும் சத்யன் ஆகியோர்களை பரிசீலனை செய்த அட்லி, பின்னர் இந்த வேடத்தை 'நான் கடவுள்' ராஜேந்திரனுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு பெரிய அதிகாரியின் டிரைவருக்கு அந்த அதிகாரி குறித்த பல ரகசியங்கள் தெரிந்திருக்கும். அப்படி ஒரு வேடத்தில் விஜய்க்கு டிரைவராக முக்கியத்துவம் உள்ள ஒரு வேடத்தில் ராஜேந்திரன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடிக்கும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

More News

இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி செல்லும் 'புலி'

விஜய் நடித்த 'புலி' திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.....

வித்யூலேகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜீத்?

ஏற்கனவே ''வீரம்'' படத்தில் அஜீத்துடன் நடித்திருந்த நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமன், சமீபத்தில் ''தல 56'' படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்நிலையில் அஜீத், வித்யூலேகா படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது......

'நானும் ரெளடிதான்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் பாராட்டை பெற்றுள்ளது.

முதல்முறையாக இணைந்த ரஜினி-அஜீத்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

சென்னையில் பிரசாந்த் நடித்த 'சாஹசம்' இசை வெளியீட்டு விழா

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் ரீ-எண்ட்ரி ஆகும் திரைப்படம் 'சாஹசம்'. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது....