தண்ணீரில் குளிச்சா உயிர் போய்விடும்… இப்படி ஒரு விசித்திர வியாதியா???
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவருக்கு தண்ணீரில் குளித்தாலே உயிர் போய்விடும் வகையில் ஆபத்தான நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நோய்த்தாக்கத்தால் அச்சிறுமி பல்வேறு விசித்திரப் பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிறிய வயது முதலே நீச்சல் என்றால் அலாதி பிரியம் கொண்ட அச்சிறுமிக்கு இப்போது தண்ணீர் என்றால் அலர்ஜி வருவதற்கு காரணம் என்ன என்பது பற்றி மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
11 வயது வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்த டேனியல் மெக்ராவல் எனும் சிறுமிக்கு அதற்குப் பின்னர் உடலில் எங்கு தண்ணீர் பட்டாலும் ஒருவித எரிச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து அதே இடத்தில் புண் மற்றும் வலி இருப்பதை உணர்ந்து இருக்கிறார். இதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற சிறுமிக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது அக்வாஜெனிக் உர்டிகேரியா எனும் விசித்திர நோயால் இவர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உலகில் 100 பேரையும் விட குறைவான மக்களுக்கு மட்டுமே இந்த விசித்திர நோய் இருக்கிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் தண்ணீர் பக்கமே செல்லக்கூடாது என அறிவுறுத்தி இருந்த நிலையில் இச்சிறுமிக்கு நாளடைவில் தண்ணீர் மட்டும் அல்ல உடலில் ஏற்படும் வியர்வை கூடும் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது.
உடலில் தண்ணீரோ அல்லது வியர்வையோ ஏற்பட்டால் முதலில் ஒவ்வாமை ஏற்பட்டு அனாபிலாக்டிக் எனும் அதிர்ச்சி ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்து இருந்தனர். இந்த அதிர்ச்சி சில நேரங்களில் பெரிய ஷாக்காக மாறி உயிரையும் பறித்து விடலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் உடலில் வியர்வை துளிகள் கூட ஏற்படாத வகையில் இச்சிறுமி கடுமையான பாதுகாப்புடன் இருக்க வேண்டி இருக்கிறது. கோடை காலத்தில் வீட்டை விட்டும் செல்ல முடியாத துன்பத்தை இவர் அனுபவித்து வருகிறாராம். தண்ணீர் என்றாலே ஒவ்வொருவரின் மனதிலும் குதூகலமான உணர்வு வருவது இயல்பு. ஆனால் இச்சிறுமிக்கு தண்ணீரால் இவ்வளவு பாதிப்பா என நினைக்கும்போது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments