குழந்தை தான் இறந்துவிட்டதே, பின் ஏன் பால் சுரக்கின்றது? ஒரு தாயின் கேள்விக்கு கிடைத்த விடை!

  • IndiaGlitz, [Wednesday,November 27 2019]

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணுக்கு 63 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதை அடுத்து குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை மரணம் அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தத் தாய் அடுத்த 63 நாட்கள் செய்த தியாகம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சயிரா என்ற என்ற பெண் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை 63 நாட்களுக்கு முன்னரே குறைப்பிரசவத்தில் பிறந்ததால் மூன்றே மணி நேரத்தில் உயிரிழந்தது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சயிரா, அடுத்த 63 நாட்களுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்து உதவ முடிவு செய்தார்.

குழந்தையின் உண்மையான டெலிவரி நாளான 63 நாட்கள் வரை தாய்ப்பாலை சேகரித்து பதப்படுத்தி வந்த சயிரா, சரியாக குழந்தை டெலிவரி ஆக வேண்டிய நாளில் சேகரித்து வைத்திருந்த அனைத்து பாலையும் தானமாக வழங்கினார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில், 'என் குழந்தை இறந்து விட்டாலும் பால் இல்லாத குழந்தைகளுக்கு உதவ வேண்டுமே என்பதற்காக இந்த பால் தானத்தை தான் செய்வதாகவும், இதனால் எனது குழந்தை இன்னும் பூமியில் இருப்பதாக உணர்வதாகவும், இந்த செயலால் எனது மகன் பெருமை கொள்வான் என்றும் அவர் உருக்கமாக தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதே நேரத்தில் 63 நாட்களுக்கு பால் கொடுத்தேன் என்பதற்காக நான் தொடர்ந்து பால் தானமாக கொடுக்க விரும்பவில்லை என்றும் இன்றுடன் நான் பால் தானம் கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதி உள்ளார்.

அவருடைய இந்த பேஸ்புக் பதிவு பெரும் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

More News

'எனை நோக்கி பாயும் தோட்டா' ரன்னிங் டைம் குறித்த தகவல்!

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது என்பது தெரிந்ததே.

காதலுக்கு இடைஞ்சல்: 11ஆம் வகுப்பு மாணவர்-மாணவி செய்த கொலை

கொடைக்கானல் அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த காதலை கண்டித்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: பாக்யராஜூக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குனர் கே.பாக்யராஜ் மீது ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரே படத்தில் இணையும் தனுஷ், நானி, நிவின்பாலி!

தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மாநில திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், நிவின் பாலி மற்றும் நானி ஆகிய மூவரும் ஒரே படத்துக்காக இணைந்துள்ளனர் 

தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சந்தீப் கிஷான்?

பிரபல தமிழ், தெலுங்கு நடிகரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இளம் நடிகர் சந்தீப் கிஷான் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி திரையுலகில் பரவிவருகிறது