குழந்தை தான் இறந்துவிட்டதே, பின் ஏன் பால் சுரக்கின்றது? ஒரு தாயின் கேள்விக்கு கிடைத்த விடை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண்ணுக்கு 63 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதை அடுத்து குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை மரணம் அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தத் தாய் அடுத்த 63 நாட்கள் செய்த தியாகம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சயிரா என்ற என்ற பெண் சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த குழந்தை 63 நாட்களுக்கு முன்னரே குறைப்பிரசவத்தில் பிறந்ததால் மூன்றே மணி நேரத்தில் உயிரிழந்தது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சயிரா, அடுத்த 63 நாட்களுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்து உதவ முடிவு செய்தார்.
குழந்தையின் உண்மையான டெலிவரி நாளான 63 நாட்கள் வரை தாய்ப்பாலை சேகரித்து பதப்படுத்தி வந்த சயிரா, சரியாக குழந்தை டெலிவரி ஆக வேண்டிய நாளில் சேகரித்து வைத்திருந்த அனைத்து பாலையும் தானமாக வழங்கினார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில், 'என் குழந்தை இறந்து விட்டாலும் பால் இல்லாத குழந்தைகளுக்கு உதவ வேண்டுமே என்பதற்காக இந்த பால் தானத்தை தான் செய்வதாகவும், இதனால் எனது குழந்தை இன்னும் பூமியில் இருப்பதாக உணர்வதாகவும், இந்த செயலால் எனது மகன் பெருமை கொள்வான் என்றும் அவர் உருக்கமாக தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
அதே நேரத்தில் 63 நாட்களுக்கு பால் கொடுத்தேன் என்பதற்காக நான் தொடர்ந்து பால் தானமாக கொடுக்க விரும்பவில்லை என்றும் இன்றுடன் நான் பால் தானம் கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் எழுதி உள்ளார்.
அவருடைய இந்த பேஸ்புக் பதிவு பெரும் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com