பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய்! அதிர்ச்சி காரணம்

  • IndiaGlitz, [Sunday,January 03 2021]

திருமணம் செய்து வைக்குமாறு அடம்பிடித்த மகனை பெற்ற தாயே தனது உறவினர்கள் மற்றும் கூலிப்படையின் உதவியால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புலமடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமியம்மா. இவருக்கு சிவபிரசாத் என்ற மகன் இருந்தார். இவர் மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொல்லை தந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தனக்கு திருமண வயது வந்துவிட்டது என்றும் திருமணம் செய்து வைக்கும்படி தாயாரிடம் அடிக்கடி சண்டை விட்டதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் மகனின் மதுப்பழக்கம் மற்றும் திருமணம் செய்து வைக்குமாறு செய்யும் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாத தாய் லட்சுமியம்மா, தனது சகோதரர் மற்றும் உறவினருடன் சேர்ந்து சிவபிரசாத்தை கொலை செய்துவிட்டு அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குழிதோண்டிப் புதைத்ததாக தெரிகிறது

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி லட்சுமியம்மா. தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபிரசாத்தை தேடி வந்தனர். அப்போது தீவிர விசாரணையில் மகனின் மதுப்பழக்கம் மற்றும் திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு செய்ததால் அவரை லட்சுமியம்மாவே கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது இதனை அடுத்து லட்சுமியம்மா மற்றும் அவரது உறவினர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்