கடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நிலையில் மனிதாபிமானமாக வளர்ப்பு குழந்தையை மட்டும் தற்கொலை செய்யாமல் அந்த குடும்பத்தினர் விட்டு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை ஒத்தக்கடை என்ற பகுதியை சேர்ந்த அருண்-வளர்மதி என்ற தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். மேலும் இந்த தம்பதி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அருண் மரணம் அடைந்துவிட்டார். அவருடைய மறைவு மற்றும் அவர் வைத்திருந்த கடன் ஆகியவற்றால் அவதிப்பட்ட வளர்மதி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதனை அவரது மகள்களிடம் கூற, அவர்களும் மரணத்துக்கு தயாரானார்கள்
இந்த நிலையில் வளர்ப்பு மகளை மட்டும் கீழ் வீட்டில் தூங்க வைத்துவிட்டு இரவு மூவரும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் குட்டியை விஷம் வைத்து கொலை செய்துள்ளனர்.
இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தபோது வளர்மதி மரணத்திற்கு முன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் கணவர் இறப்பு மற்றும் கடன் தொல்லை ஆகியவை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் வளர்ப்பு மகளை தற்கொலை செய்ய வைக்க தங்களுக்கு உரிமை இல்லை என்பதால் அவரை மட்டும் விட்டு விட்டதாகவும் தங்களிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து அந்த குழந்தையை காப்பாற்றுமாறும் உருக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் மதுரை நகரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments