மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: சமூகவலைத்தள விமர்சனம் காரணமா?

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் தாய் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெங்கடேஷ் - ரம்யா தம்பதியின் ஏழு மாத குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலர் கடுமையாக குழந்தையின் பெற்றோர்களை குறிப்பாக தாயை விமர்சனம் செய்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் வசிப்பவரும் கண்டித்து உள்ளதாக தெரிகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான ரம்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தை உடன் வந்திருந்தார். இந்த நிலையில் ரம்யா பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்று இருந்த போது ரம்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தையை சரியாக பார்த்து கொள்ளவில்லை என்ற விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

சுசித்ரா கூறிய போதை குற்றச்சாட்டு.. விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜலட்சுமி

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறிய  நிலையில் அவர் கூறிய திரை உலக பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தாய் தெய்வ வழிபாட்டின் சிறப்புகள்: சிவ சதீஷ்குமார் அவர்களின் பேட்டி

ஆன்மீக பேச்சாளர் சிவ சதீஷ்குமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாய் தெய்வ வழிபாட்டின் சிறப்புகள் பற்றியும், பல்வேறு தாய் தெய்வங்களை வழிபடுவத

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சையா? என்ன ஆச்சு?

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்னும் சில நாட்களில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரே படத்தில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார்.. முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால்..!

ஒரே திரைப்படத்தில் தென்னிந்திய பிரபலங்களான பிரபாஸ், மோகன்லால் , சரத்குமார், மோகன் பாபு ஆகியோர் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க

இந்த 3 நடிகர்களுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கு திருமணம்.. விஷால் பேட்டி..!

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது ஆகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம்