அதிகாரிகள் முன் தாய்ப்பால் சுரந்து சோதனை. ஜெர்மனி விமான நிலையத்தில் இந்திய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் என்ற விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அதிகாரிகள் முன் மார்பகத்தில் தாய்ப்பால் சுரந்து காண்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் காயத்திரி போஸ் என்பவர் சமீபத்தில் ஜெர்மனி சென்றார். அங்குள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் வழக்கம்போல் அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய கைப்பையில் இருந்த ஒரு வினோத கருவியால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அது தாய்ப்பாலை சுரக்க பம்ப் செய்யும் கருவி என்று காயத்திரி சமாதானம் செய்தும் அதிகாரிகள் நம்பவில்லை.
இதனை அடுத்து அவர் பெண் ஊழியர்களிடம் அனுப்பப்பட்டு அந்த கருவி மூலம் மார்பகத்தில் இருந்து பாலை சுரக்க செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். அவருடைய பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் இருந்ததால் வேறு வழியின்றி அந்த பம்ப் மூலம் தாய்ப்பாலை சுரந்து காட்டியபின்னரே அவர் வெளியே அனுப்பப்பட்டார்.
ஜெர்மனியின் தனக்கு நடந்த அவமானத்தால் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், குறிப்பிட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் காயத்ரி போஸ் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout