செல்போன் வெடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

கரூர் அருகே சார்ஜில் இருந்த செல்போன் அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கரூர் அருகே உணவகம் நடத்தி வரும் முத்துலட்சுமி மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் தீக்‌ஷித் மற்றும் ரக்‌ஷீத் நேற்று இரவு தூங்கும் போது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி பின்னர் திடீரென வெடித்தது. இதனால் ஏற்பட்ட தீவிபத்து மற்றும் புகை மூட்டத்தால் தாய் முத்துலட்சுமி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து மயக்கமற்று இருந்த தீக்‌ஷித் மற்றும் ரக்‌ஷித் ஆகிய இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் வெடித்ததால் மூவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் முழுவதும் சார்ஜ் ஆகிய பின்னர் ஏற்பட்ட மின்கசிவால் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அதனருகில் தூங்குவது ஆபத்தானது என்று ஏற்கனவே பலர் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் குறைந்தவிலையில் தரமில்லாத பேட்டரியினாலும் செல்போன் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் செல்போன் கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More News

ஒரே வீட்டில் 3 பெண்கள் காதல் திருமணம்: அடுத்தடுத்து நடந்த 2 தற்கொலைகள்

ஒரே வீட்டில் 3 பெண்கள் அடுத்தடுத்து காதல் திருமணம் செய்துகொண்ட விரக்தியால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

கொரோனா வைரஸ் மெதுவாகக் கூட அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்… எச்சரிக்கும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு குறைந்தது 4-5 நாட்களில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

பாறைமீது மோதிய சரக்கு கப்பல்!!! 1,000 டன் பெட்ரோல் கடலில் கலந்ததாகப் பரபரப்பு!!!

கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடான மொரிஷீயஸ் கடல் பகுதியில் 3,800 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அங்குள்ள பாறை

ரஷ்யாவின் வோல்கா நதியில் 4 தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

ரஷ்யாவில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இன்றும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: என்ன நடக்குது தமிழகத்தில்?

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி வருகிறது என்பதும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும்