அதிக பார்வையாளர்களை கொண்ட படம்.. ஜோதிகாவுக்கு முதலிடம், விஜய்க்கு இரண்டாமிடம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்படங்கள் ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட படம் ஜோதிகா நடித்த படம் என்றும் இரண்டாவது ஆக விஜய் நடித்த படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களை ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியிடும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் இதற்காகவே ஹிந்தி டப்பிங் உரிமை மிகப் பெரிய தொகைக்கு வாங்கப்படும் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் கௌதம் ராஜ் என்பவர் இயக்கி இருந்த ’ராட்சசி’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் ஹிந்தியில் டப் செய்து ’மேடம் கீதா ராணி’ என்ற பெயரில் யூடியூபில் வெளியானது. இந்த படத்திற்கு தற்போது 32 கோடி பார்வையாளர்கள் கிடைத்துள்ளன என்பதும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட தமிழ் டப்பிங் ஹிந்தி படம் இதுதான் என்பதும் தெரிய வந்துள்ளது. இதற்கு அடுத்த விஜய் நடித்த ’ஜில்லா’ படம் 27 கோடி பார்வையாளர்களை பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது.
தென்னிந்திய திரைப்படங்களைப் பொறுத்தவரை பெல்லம் கொண்ட சீனிவாசா, ரகுல் பிரீத்தி சிங் நடித்த ’ஜெயா ஜானகி நாயகா’ என்ற திரைப்படம் ’கூன்கர்’ என்ற பெயரில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் இந்த படம் 70 கோடி பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments