2023ல் கூகுளில் தேடப்பட்ட திரைப்படங்கள்.. ரஜினி, விஜய்யை முந்திய அட்லி..!

  • IndiaGlitz, [Tuesday,December 12 2023]

உலக அளவில் கூகுளில் 2023 ஆம் ஆண்டு தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் ரஜினியின் ’ஜெயிலர்’ விஜய்யின் ’லியோ’ படங்களை விட அட்லியின் ’ஜவான்’ படம் முந்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்திய அளவில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் முதலிடத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் உள்ளது. இதனை அடுத்து பாலிவுட் நடிகர் சன்னி லியோன் நடித்த ’கடார் 2’ படமும் மூன்றாவது இடத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ஓபன் ஹெய்மர்’ படமும் உள்ளது.

பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ மிகப்பெரிய தோல்வி அடைந்தாலும் இந்த படம் கூகுளில் தேடப்பட்ட பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் இன்னொரு படமான வெற்றி படமான ’பதான்’ ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சர்ச்சைக்குரிய படமாக கருதப்பட்டாலும் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த ‘தி கேரளா ஸ்டோரி’ ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ ஏழாவது இடத்தையும், தளபதி விஜய்யின் ‘லியோ’ எட்டாவது இடத்தையும் சல்மான்கான் நடித்த ’டைகர்’ திரைப்படம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் தளபதி விஜய்யின் ’வாரிசு’ திரைப்படம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ரஜினி ’ஜெயிலர்’ விஜய்யின் ’லியோ’ ’வாரிசு’ படங்களை விட அட்லியின் ‘ஜவான்’ படம் முதல் இடத்தில் உள்ளது என்பதும் ஆனால் அதே நேரத்தில் விஜய், ஷாருக்கான் ஆகியோர்களின் இரண்டு படங்கள் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.