குழந்தையில்லா தாய்மார்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்த கொரோனா: ஆச்சரிய தகவல்
- IndiaGlitz, [Wednesday,July 22 2020]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் மனித இனமே அச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளன. கோடிக்கணக்கான பணம் செலவழித்தும் தூய்மை படுத்த முடியாத கங்கை நதி,ம் தற்போது தானாகவே தூய்மை ஆகியுள்ளது. தொழிற்சாலைகள் இயங்காததால் அதன் கழிவுநீர் கங்கையில் கலக்கவில்லை என்பதால் கங்கை நீர் தூய்மையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காற்றில் மாசு என்பது பெருமளவு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று பெரும்பாலான தாய்மார்கள் கர்ப்பமாக உள்ளதாக குறிப்பாக குழந்தை இல்லாமல் இருந்த பல தாய்மார்கள் இந்த ஊரடங்கு விடுமுறையில் தாய்மை அடைந்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்குச் செல்லும் போது இருவரும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் தாம்பத்யம் இருந்தும் திருப்தி இல்லாமல் இருந்ததாகவும், அதனால் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது என்றும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எவ்வளவோ மருத்துவ சிகிச்சை செய்தும் பயன் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போது தம்பதியர் இருவருமே வேலை இல்லாமல் அல்லது வொர்க் ப்ரம் ஹோம் என அலுவலக டென்ஷன் இல்லாமல் சந்தோசமாக இருப்பதால் தாம்பத்யமும் திருப்தியாக இருப்பதாகவும், இதனால் குழந்தை இல்லாத பல தாய்மார்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் கிடைத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர்
ஊரடங்கு உத்தரவால் வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் தம்பதியர்களுக்கு பொருளாதார கஷ்டம் இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் தாம்பத்தியம் முழு அளவில் திருப்தியோடு நடந்துள்ளதாகவும் இதுவே பல தாய்மார்கள் தாய்மை அடைந்து இருப்பதற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே கொரோனாவால் பல்வேறு கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு சிலரின் வாழ்வை மலரச் செய்துள்ளது என்பது சந்தோஷமான தகவல் ஆகும்