மரணத்தின் விளிம்பிற்கே சென்று…. கின்னஸ் சாதனை புரிந்த நம்ம ஊரு கராத்தே மாஸ்டர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானாவைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளார். அதற்கு அவர் செய்த சாதனைதான் மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கராத்தே மாஸ்டராகப் பணிபுரிந்து வரும் பிரபாகர் ரெட்டி இந்தச் சாதனையை நெல்லூரைச் சேர்ந்த தனது மாணவர் ராஜேஷ் உடன் இணைந்து செய்திருக்கிறார்.
இந்தச் சாதனைக்காக அவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கான சாதனையில் இவர்கள் பங்கேற்று இருக்கின்றனர். அதில் ஒருவர் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். அவரைச் சுற்றி தேங்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அந்தத் தேங்காயை மற்றொருவரை கண்ணைக் கட்டிக்கொண்டே பெரிய சுத்தியலை வைத்து உடைக்க வேண்டும். இதுதோன் போட்டி.
இந்தச் சாதனையாளர்களுக்கு ஒரு நிமிடத்தில் 35 தேங்காய்களை உடைக்க வேண்டும் என விதிமுறை கொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரு நிமிடத்தில் 49 தேங்காய்களை உடைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கின்றனர். மரணத்தின் விளிம்பிற்கே சென்றாலும் பரவாயில்லை, சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துவிட வேண்டும் என இதுபோன்று சிலர் முயற்சிப்பது பல நேரங்களில் பயத்தையே ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கராத்தே மாஸ்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout