கொசு கடித்தால் கொரோனா வருமா??? அதிர்ச்சி ஏற்படுத்தும் புது ஆய்வுத் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதன் அறிகுறிகள், நோய்த் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி உலகம் முழுவதும் வதந்திகளும் அச்சங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த் துளிகளில் இருந்து பரவும் தன்மைக் கொண்டது என்பதால் அதன் பல்வேறு தன்மைகள் குறித்தும் மக்களிடையே அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொசுக் கடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி இருந்தது. மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் லால் அகர்வால் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து இருந்தார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசுக்களால் பரவ வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இதே போன்ற கருத்தை இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இத்தாலியின் தேசிய சுகாதாரக் கழக விஞ்ஞானிகள் “கொசுக்களால் கொரோனா வைரஸை கடத்த முடியுமா” என்கிற ரீதியில் ஆய்வை மேற்கொண்டு இருந்தனர். இந்த ஆய்வின் முடிவில் சாதாரண கொசுக்களாலும் வேறு எந்த வகை கொசுக்களாலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 1 கோடியை நெருங்குகிறது. இதுவரை 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். படுமோசமாக அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் திண்டாடி வருகின்றன. அடுத்ததாக ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. கொரோனா சுவடே தெரியாமல் இருந்த பல ஆப்பிரிக்க நாடுகளும் தற்போது முன்னணி வரிசைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் மனிதர்கள் மீதான தடுப்பு மருந்து சோதனையை சில நாடுகள் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. உலகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையாக கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments