பெட்ரோல் இவ்வளவு மலிவா??? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிறுவனம்!!!
- IndiaGlitz, [Tuesday,May 12 2020]
பிரிட்டனில் உள்ள பிரபல பெட்ரோல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சல்லிசாக பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது. தொடர்ந்து நிலவும் கச்சா எண்ணெயின் சரிவால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் அந்நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. பிரிட்டன் முழுக்க உள்ள மோரிசன் பெட்ரோல் நிறுவனத்தின் பங்குகளில் 1 பவுண்டு கொடுத்தாலே போதும் 1 லிட்டர் பெட்ரோலை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் 50 பெட்ரோலை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு 4.50 பவுண்டுகள் லாபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக பெட்ரோல் உற்பத்தியின் அளவை ஒபேக் நாடுகள் 10 விழுக்காடு குறைத்து இருக்கிறது. ஏற்கனவே டெண்டர் கொடுக்கப்பட்ட நிறுவனங்களின் உற்பத்தியால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் உற்பத்தியை தொடர்ந்து குறைக்க முடியாமலும், அதைத் தேக்கி வைப்பதற்கான கலன்கள் இல்லாமல் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து பிரிட்டன் முழுவதும் ஒரு சில நிறுவனங்கள் 1 பவுண்டுக்கு பெட்ரோலை விற்றாலும் மோரிசன் நிறுவனம் தொடர்ந்து நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் பெட்ரோல் விலையை கணிசமாகக் குறைக்கும் எனவும் எதிர்ப் பார்க்கப்படுகிறது.