அணியின் வெற்றிக்காக பதவி விலகவும் தயார்… பகீர் அறிவிப்பு வெளியிட்ட கேப்டன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் இயான் மோர்கன் “அணியின் வெற்றிக்கு தடையாக இருக்க விரும்பவில்லை. அணிக்காக பதவி விலகவும் தயார்“ என்று பகீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டி20 உலகக்கோப்பை போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பார்மில் இல்லை. சமீபத்தில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் படு சொதப்பலாக விளையாடி வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
கேப்டன் இயான் மோர்கன் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாக இருந்து ஐபிஎல் இறுதிப்போட்டி வரை அணியை வழி நடத்திச் சென்றார். இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் இயான் மோர்கன் 40 டி20 போட்டிகளில் விளையாடியதாகவும் அதில் 16.63 சராசரியோடு 499 ரன்களை மட்டுமே குவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய போட்டிகளிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் முதல் பாதி போட்டிகளில் இயான் மோர்கனின் அதிகப்பட்ச ரன் 47 ஆக இருந்தது. அடுத்த பாதி ஆட்டத்தில் ஒருமுறைகூட அவர் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இயான் மோர்கன் ஃபார்மில் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் இயான் மோர்கன், “நான் அணியின் நிரந்தர வீரர் கிடையாது. இங்கிலாந்து அணியின் பாதையில் இடையூறாக இருக்க மாட்டேன். என்னுடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால் எமது கேப்டன்சி சிறப்பாக இருக்கிறது. அதில் எவ்வித குறையும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஒருவேளை என்னுடைய பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாக இருந்தால் பிளேயிங் லெவன்-இல் இருந்து வெளியேறுவேன். பௌலராகவோ அல்லத பீல்டராகவோ பங்களிப்பு செய்வதைவிட கேப்டன் பணியைத்தான் அதிகம் விரும்புகிறேன். நாங்கள் ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம். இப்போதும் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும். கடந்த 6 ஆண்டுகளில் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கவில்லை. தறபோது திறமையான இளம் வீரர்களும் அணிக்குள் வந்திருக்கிறார்கள். இதனால் அணி மேலும் பலமாக மாறியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments