'விஜய் 59' படத்திற்கு தேசிய விருது? அடித்து சொல்லும் படக்குழுவினர்

  • IndiaGlitz, [Saturday,October 31 2015]

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வரும் பிரபல இயக்குனர் மகேந்திரன் நடிப்பை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போதைய இளையதலைமுறை கலைஞர்களுக்கு மகேந்திரனின் நடிப்போ அல்லது இயக்க ஸ்டைலோ தெரிய வாய்ப்பில்லை. மேலும் அவர் முதன்முதலில் வில்லனாக நடிப்பதால், அவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்க படக்குழுவினர்களே ஆவலாக இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் விஜய்-மகேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டபோது, எவ்வளவு கஷ்டமான காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கிலும், ஒருசில சமயங்களில் மட்டும் இரண்டாவது டேக்கில் அவர் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய நடிப்பை நேரில் பார்த்த படக்குழுவினர் கண்டிப்பாக அவருக்கு சிறந்த வில்லனுக்கான தேசிய விருது கிடைக்கும் என்று அடித்து கூறி வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக பெரிதும் பேசப்படும் கேரக்டராக மகேந்திரனின் கேரக்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

நீதிமன்றத்தின் வரிவிலக்கு உத்தரவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து

திரைப்படங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் வரிவிலக்கு சலுகை முழுமையாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

ஒரே இடத்தில் அஜீத் மற்றும் பாலா

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் DI, அதாவது டிஜிட்டல் மற்றும் VFX பணிகள் ஜெமினி லேபில் நடைபெற்றது....

நடிகர் விவேக் மகன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னகுமார் நேற்று மூளைக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்த செய்தி அறிந்ததும்...

தனுஷ் தம்பி படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

தனுஷின் அனைத்து படங்களுக்கும் தொடர்ச்சியாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத், தற்போது 'வேலையில்லா பட்டதாரி' ...

மும்பையின் முக்கிய தலைவருடன் கமல் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் ரிலீசாகவுள்ள...