1000ஐ தாண்டியது ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்
- IndiaGlitz, [Saturday,May 16 2020]
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை ராயபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 971 இருந்த நிலையில் தற்போது அது 1,047ஆக அதிகரித்துள்ளது.
ராயபுரத்தை அடுத்து சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மண்டலமும் ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவிக நகரில் 737 பேர்களும், தேனாம்பேட்டையில் 640 பேர்களும், அண்ணாநகரில் 493 பேர்களும், வளசரவாக்கத்தில் 483 பேர்களும், தண்டையார் பேட்டையில் 474 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடையாறு பகுதியில் 316 பேர்களும், அம்பத்தூரில் 285 பேர்களும், மணலியில் 133 பேர்களும், மாதவரத்தில் 92 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் இதுவரை 5946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 1071 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.