ராஜஸ்தான் அடித்த 216 ரன்களில் 58 ரன்கள் இரண்டே ஓவர்களில்.. ஆச்சரிய தகவல்
- IndiaGlitz, [Wednesday,September 23 2020]
நேற்று ஷார்ஜாவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சொதப்பலாக இருந்ததே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜஸ்தான் அணி எடுத்த மொத்த ரன்களான 216ல் 58 ரன்கள் அதாவது நான்கில் ஒரு பகுதிக்கும் மேற்பட்ட ரன்கள் இரண்டே ஓவர்களில் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
பியூஷ் சாவ்லா வீசிய எட்டாவது ஓவரில் மொத்தம் 4 சிக்சர்கள் அடிக்கப்பட்டன என்பதும் நான்கு சிக்ஸர்களில் 3 சிக்சர்களை சஞ்சு சாம்சனும் ஒரு சிக்சரை கேப்டன் ஸ்மித்தும் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இந்த ஓவரில் இரண்டு நோபால்களும் வீசப்பட்டன என்பதும் ஒரு சொதப்பல் ஆகும்
அதேபோல் நிகிடி வீசிய கடைசி ஓவரில் மொத்தம் 30 ரன்கள் அடிக்கப்பட்டன என்பதும் இதில் இரண்டு சிக்ஸர்கள் என்பதும் அதனால் இந்த ஓவரில் மொத்தம் நான்கு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 58 கிடைத்ததால் தான் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 216 என உயர்ந்தது என்பதும் இல்லாவிட்டால் 180க்கும் குறைவான ரன்களே அந்த அந்த அணி எடுத்திருக்கும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்