5 வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருக்கும் கமல்ஹாசன் படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் திரை உலக வாழ்வில் ஒரு திரைப்படம் ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த ஒரே படம் ’ இந்தியன் 2’ படம் தான். இந்த படம் ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த நிலையில் தற்போது தான் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன்’ என்ற திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

2019 ஜனவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 12ஆம் தேதி இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இருவரது திரை உலக வாழ்க்கையில் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருந்த ’இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.