ஆறே நாட்களில் ஒரு லட்சம், 5 லட்சத்தை கடந்த இந்திய கொரோனா பாதிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 509,446 என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர 139 நாட்கள் ஆனது. ஆனால் அடுத்தடுத்த லட்சங்கள் ஒருசில நாட்களில் உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு லட்சம் பாதிப்பு எத்தனை நாட்களில் என்பதை பார்ப்போம்
139 நாட்களில் முதல் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
16 நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
11 நாட்களில் இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
9 நாட்களில் மூன்று முதல் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
6 நாட்களில் நான்கு முதல் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்
இதே ரீதியில் சென்றால் இன்னும் 20 நாட்களில் 10 லட்சம் பேர்கள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-ஆம் இடத்தில் உள்ள இந்தியாவில் இதுவரை 15,655 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 381 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1,52,765 என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் மூன்று மாதங்கள் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout