6 மண்டலங்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேல்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் இருந்து வரும் நிலையில் சென்னையின் ஆறு மண்டலங்களில் மட்டும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னையில் மொத்தம் 12,762 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் என இந்த ஆறு மண்டலங்களில் மட்டும் கொரோனாவின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9189ஆக உள்ளது.

சற்றுமுன்னர் சென்னை மாநகராட்சி, சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 2324 பேர்களும், கோடம்பாகத்தில் 1646 பேர்களும், திருவிக நகரில் 1393 பேர்களும், தேனாம்பேட்டையில் 1412 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1322 பேர்களும் அண்ணாநகரில் 1089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வளசரவாக்கம் மண்டலத்தில்794 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 719 பேர்களும், அம்பத்தூரில் 516 பேர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக்கிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மணமகள் கோலத்தில் மீராமிதுன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில்

தமிழ் நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு

பல தமிழ் திரைப்படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை ஒருவரின் மகனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'பிகில்' திரைப்படம் ரூ.20 நஷ்டமா? அர்ச்சனா கல்பாதி விளக்கம்

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'பிகில்'. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி

அடுத்தடுத்த அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தான் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருவார் என்பது தெரிந்ததே