6 மண்டலங்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேல்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கும் இருந்து வரும் நிலையில் சென்னையின் ஆறு மண்டலங்களில் மட்டும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

சென்னையில் மொத்தம் 12,762 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் அண்ணாநகர் என இந்த ஆறு மண்டலங்களில் மட்டும் கொரோனாவின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9189ஆக உள்ளது.

சற்றுமுன்னர் சென்னை மாநகராட்சி, சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி ராயபுரம் மண்டலத்தில் 2324 பேர்களும், கோடம்பாகத்தில் 1646 பேர்களும், திருவிக நகரில் 1393 பேர்களும், தேனாம்பேட்டையில் 1412 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1322 பேர்களும் அண்ணாநகரில் 1089 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வளசரவாக்கம் மண்டலத்தில்794 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 719 பேர்களும், அம்பத்தூரில் 516 பேர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.