இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 70 ஆயிரமாக உயர்வு: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Tuesday,May 12 2020]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 67,152ஆக இருந்த நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 70,756ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917ல் இருந்து 22,455ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206லிருந்து 2,293ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் இதுவரை 22,171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 868ஆக உள்ளது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது
மகாராஷ்டிராவை அடுத்து குஜராத்தில் 8,194 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் டெல்லியில் 6,923 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், ராஜஸ்தானில் 3814 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், மத்தியபிரதேசத்தில் 3614 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், உத்தரபிரதேசத்தில் 3467 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
மேலும் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 42,55,954ஆக உள்ளது என்பதும், அதில் அமெரிக்காவில் மட்டும் 13,85,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது