ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நிலவரம்
- IndiaGlitz, [Wednesday,May 20 2020]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் சற்றுமுன் தெரிவித்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750ஆக உயர்ந்துள்ளது.
நேற்று இந்தியாவில் கொரோனாவால் 1,01,139 பேர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல் ஆகும். மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 49,85,658 என்பதும், 324,889 பேர்கள் உலக அளவில் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,70,583 என்பதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533 என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவில் 299,941 பேர்களும், ஸ்பெயினில் 278,803 பேர்களும், பிரேசிலில் 271,885 பேர்களும், இங்கிலாந்தில் 248,818 பேர்களும், இத்தாலியில் 226,699 பேர்களும், பிரான்ஸில் 180,809 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது