இந்தியாவில் 46 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று
- IndiaGlitz, [Tuesday,May 05 2020]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொரோனாவின் தாக்குதல் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3500க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 42,836ஆக இருந்த நிலையில் இன்று 46,433 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 3597 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,389 லிருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,762 லிருந்து 12,727 ஆக உயர்ந்துள்ளது
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,42,508 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,94,246ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,52,214ஆகவும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் அமெரிக்காவில் 12,12,835 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 211,938 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 190,584 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் 169,462 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 166,152 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 145,268 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது