உத்திரமேரூரில் கல்குவாரி விபத்து- 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணி தீவிரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்றில் இன்று மதியம் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. கல்குவாரியின் ஒரு பகுதியில் இருந்த கற்கள் முழுவதும் சரிந்து விழுந்ததால் அதில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கலாம் என்றும் தற்போதுவரை 2 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்திரமேரூர் அடுத்த மதூர் எனும் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எப்போதும்போல 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். மேலும் ஜேசிபி வாகனங்கள் மற்றும் லாரிகள் என பலவும் மும்முரமாக வேலைப் பார்த்து வந்தபோது இன்று மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் கல்குவாரியில் நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களும் நிலச்சரிவில் சிக்கி கொண்டு விட்ட நிலையில் அங்கு மீட்புப்பணி தீவிரப்படுத்தப் பட்டு இருக்கிறது. தற்போதுவரை அந்த விபத்தில் 2 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த விபத்தினால் கல்குவாரிக்கு செல்லும் சாலைகளும் சீர்குலைந்து இருக்கிறது. இந்நிலையில் அங்கு வருவாய்த் துறையினர் உட்பட பலரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments