ஜிஎஸ்டி வரி எதிரொலி: ஜூனில் ரிலீசாக குவியும் திரைப்படங்கள்

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி திட்டத்தை திரைத்துறைக்கும் வழங்கியுள்ளதால் வரும் ஜூலை 1 முதல் திரைத்துறைக்கும் 28% வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பின்னர் எந்த திரைப்படத்திற்கும் வரிவிலக்கு கிடையாது. எனவே ஜூலை 1க்கு முன்னதாகவே வரிவிலக்கு பெற்று ரிலீஸ் செய்ய பல திரைப்படங்கள் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் 'வனமகன்', செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை', விக்ரம் பிரபுவின் 'சத்ரியன்', சக்தி வாசுவின் '7 நாட்கள்', ஆகிய படங்கள் ஜூன் மாத வெளியீடு என்பதை உறுதி செய்துள்ளன. மேலும் சில படங்களின் ஜூன் ரிலீஸ் அறிவிப்புகள் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்திற்குள் வரிவிலக்கு பெற்று படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே விஷால் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.