இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு:
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 35,403ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 என அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 1933 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147லிருந்து 1218ஆக உயர்ந்துள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 9951ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,01,189 பேர்கள் என்பதும், உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,39,604 பேர்கள் என்பதும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,81,639 பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இதுவரை 11,31,452 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் கொரோனாவுக்கு 1,61,563 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஸ்பெயினில் 242,988 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியில் 207,428 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தில் 177,454 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸில் 167,346பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெர்மனியில் 164,077 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.