இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1793 பேர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1793 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,075லிருந்து 1,147 ஆக உயர்ந்துள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் 10,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இதுவரை 1,773 பேர் குணமடைந்ததாகவும், 459 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,04,140 பேர்கள் என்பதும், உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233,829 பேர்கள் என்பதும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,039,055 பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இதுவரை 10,95,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 239,639 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியில் 205,463 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தில் 171,253 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸில் 167,178 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout