இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 33 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் நேற்று இந்தியாவில் 31,332 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று சுமார் 2000 பேர்களுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,008லிருந்து 1,074 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் உலகம் அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,19,242 ஆக உயர்ந்துள்ளதாகவும், உலக அளவில் இதுவரை கொரோனாவால் 2,28,194 பேர்கள் பலியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 10,64,194 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 236,899 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 203,591 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்சில் 166,420 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 165,221 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 161,539 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது