இந்தியாவில் 31ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: 1000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
- IndiaGlitz, [Wednesday,April 29 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும் தினமும் சராசரியாக 1000 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 31,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியுள்ளது என்பதும், அதாவது இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1007 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7696ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் அதிக பாதிப்பை அடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு என்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது என்பதும், மகாராஷ்டிராவை அடுத்து குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3314 என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 3,136,508 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 217,813 பேர்கள் பலியாகியுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் 'கொரோனா'வுக்கு 59, 252 பேர் பலியாகியுள்ளதாகவும், அந்நாட்டில் மொத்தம் 1,035,765 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் கொரோனாவுக்கு 232,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவுக்கு 201,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு 165,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 161,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.