இந்தியாவில் 29 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஊரடங்கையும் மீறி உயர்வதால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,April 28 2020]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் சுமார் ஆயிரம் வரை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் 29,435 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 934 ஆக அதிகரித்துள்ளதாகவும், 6,869 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. தமிழகம் 1885 கொரோனா நோயாளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேல் ஊரடங்கு அமலில் இருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,064,837 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 1,010,507 பேர்களும், ஸ்பெயினில் 199,414 பேர்களும், பிரான்ஸில் 165,842 பேர்களும், ஜெர்மனியில் 158,758 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.